இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனாவால் உயிரிழப்பு

0 6829
இயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் உடலுக்கு, பாதுகாப்புக் கவச உடைகளுடன் இயக்குநர் அருண்ராஜா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரை கண்கலங்கச் செய்தது.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத்தன்னைக் கொண்ட அருண்ராஜா, முதன் முதலில் 2018ஆம் ஆண்டு வெளியான கனா படத்தினை இயக்கினார்.

இந்நிலையில் அருண்ராஜாக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சைப் பலனின்றி சிந்துஜா நேற்றிரவு உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு கவச உடைகளை அணிந்து வந்து இழப்பின் துயர் தாங்காமல் அருண்ராஜா கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments