இந்தியாவில் ஸ்புட்னிக் மருந்து தயாரிக்க சில்பா மெடிகேர் நிறுவனத்துக்கு அனுமதி

0 3761
இந்தியாவில் ஸ்புட்னிக் மருந்து தயாரிக்க சில்பா மெடிகேர் நிறுவனத்துக்கு அனுமதி

ந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைத் தயாரிக்க சில்பா மெடிகேர் நிறுவனத்துடன் ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலேயா நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் ஐதராபாத் ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மருந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஸ்புட்னிக் தடுப்பு மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சில்பா மெடிகேர் நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது.

இதன்படி சில்பா மெடிகேர் நிறுவனம் அடுத்த ஓராண்டில் 5 கோடி டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைத் தயாரிக்கும். இந்த மருந்தின் விற்பனை உரிமையை ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனமே வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments