இ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன? இ-பதிவு மேற்கொள்வது எப்படி?

0 24554
இ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன? இ-பதிவு மேற்கொள்வது எப்படி?

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸுக்கும், இ-பதிவுக்கும் இடையேயான வித்தியாசம் என்ன..? இ- பதிவு மேற்கொள்வது எப்படி..?

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்குள்ளும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இ-பதிவு முறையும், கடந்த வருடம் நடைமுறையிலிருந்த இ-பாஸ் முறையும் முற்றிலும் வெவ்வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இ-பாஸ் முறை என்பது எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு செல்கிறோம், எதற்காக செல்கிறோம் என்பதை தமிழக அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதனை அதிகாரிகள் சரிபார்த்து நாம் குறிப்பிடும் காரணம் அத்தியாவசிய காரணமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவார்கள். தேவையற்ற காரணங்களாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும்.

ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ-பதிவு முறை முற்றிலும் வேறுபட்டது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ அல்லது மாவட்டத்திற்கு உள்ளேயோ செல்ல வேண்டுமென்றால் விவரங்களை https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்தபின் அந்த நகலை எடுத்துக்கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த தடையுமின்றி செல்லலாம். அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இ-பாஸ் முறையில் முக்கிய தேவைகளுக்காக செல்லக்கூடியவர்கள் அனுமதி கிடைக்காமல் காத்திருந்து, சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இடம்விட்டு இடம் பயணிக்கிறார்கள். பயணம் செய்வோருக்கு ஒருவேளை, தொற்று ஏற்பட்டால் அவர்களை உடனடியாக டிராக் செய்வது மட்டுமே இ - பதிவு முறையின் நோக்கம்.

தற்போது, மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல விரும்புவோர் எவ்வாறு இ-பதிவு மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

திருமணம், இறப்பு, மருத்துவம், முதியோர் பராமரிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக செல்ல விரும்புவோர் https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இணையதளத்தின் முதல் பக்கத்தில் 2 ஆப்ஷன்கள் இருக்கும். வெளிநாட்டிலிருந்து அல்லது வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் மற்றொன்று மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் மேற்கொள்பவர்கள் இவற்றில் தேவையான ஒன்றை தேர்வு செய்து உள்ளே சென்றபின் தனி நபரா.? குழுவினரா..? என கேட்கும்.

அதில் சம்பந்தப்பட்ட ஆப்ஷனை கொடுத்தால், எந்த வகை வாகனத்தில் பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்படி இருசக்கர வாகனம் என்றால் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். கார்களில் 3 பேர் வரை பயணிக்கலாம். மேலும் பயணம் செய்வோரின் அடையாள அட்டை மற்றும் பயண காரணத்திற்கான ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும்.

அந்த ஆவணமானது ஒரு மெகாபைட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள அட்டையாக சமர்ப்பிக்கலாம். பயணம் செய்யவிருக்கும் வாகன எண்ணையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால் உங்களது இ-பதிவு வெற்றிகரமான முடிவடையும். அதனை டவுண்லோட் செய்தோ அல்லது Soft copy-யை காட்டியோ எந்த தடையுமின்றி பயணம் மேற்கொள்ளலாம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments