பொது இடங்களில் உள்ள நீராவி சிகிச்சையை பயன்படுத்த வேண்டாம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1498
பொது இடங்களில் உள்ள நீராவி சிகிச்சையை பயன்படுத்த வேண்டாம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீராவி சிகிச்சை முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பு மையத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 

நீராவி இயந்திரத்தில் அடுத்தவர் பிடிப்பதை உடனடியாக நாமும் பிடிப்பதால் கொரோனோ நோய் பரவும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.

சென்னையில் கடந்த 3 நாட்களாக நோய் பரவல் குறைந்து வருவதாக அமைச்சர் கூறினார். 250 முதல் 300 மருத்துவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளிகளுக்கு நேரடியாக சென்று ஆலோசனை வழங்கி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments