இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா சிகிச்சைக்கு உதவும் புதிய மருந்து..!

0 4248
இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா சிகிச்சைக்கு உதவும் புதிய மருந்து..!

கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ-வின் புதிய மருந்தான 2-DG ஐ பாதுகாபபுத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தனும் சேர்ந்து டெல்லியில் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

டிஆர்டிஓ-வின் இன்மாஸ் ஆய்வக விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த மருந்து பவுடர் வடிவில் உள்ளது. இதை நீரில் கலக்கி அருந்தினால், 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னதாகவே கொரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என கிளினிகல் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ வறியுள்ளது.

அத்துடன் ஆக்சிஜனை நம்பி இருக்கும் தேவையும் இந்த மருந்தின் மூலம் குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-DG மருந்தை டிஆர்டிஓ-உடன் சேர்ந்து ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் தயாரிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments