புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு

0 2506
புதிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டுமென கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் மத்திய அரசின் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது.

மாநில கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அழைப்பு விடுத்ததால் கூட்டத்தை புறக்கணித்ததாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு, மாநில பட்டியலில் கல்வி இடம்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments