பலத்த மழை சூறாவளியுடன் இயற்கையின் சீற்றம்..!

0 1019
பலத்த மழை சூறாவளியுடன் இயற்கையின் சீற்றம்..!

குஜராத்தை நெருங்கியுள்ள புயல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி வீடுகளுக்குள் முடங்கினர்.

புயல் குஜராத்தை நெருங்கியிருக்கும் நிலையில் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களின் வானிலை சட்டென மாறியது. நகரின் பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை சாத்தியமில்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

குஜராத்தின் ஜூனாகட் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1200க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். ஆறுகள் கடல் ஓரமாக வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி குஜராத் அரசு அறிவித்துள்ளது. அவசர கால சேவைகளுக்கு தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

இதனிடையே மகாராஷ்ட்டிராவில் உள்ள ஜல்காவோன் பகுதியில் பலத்த காற்று வீசியதில் பழுத்த மரம் ஒன்று சாயந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.

மும்பைக்கு புயலால் பாதிப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால் புயல் காரணமாக அங்கு பலத்த காற்று வீசுகிறது. இன்று காலை வடாலா பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments