புதுப்பேட்டை, அசுரன் படங்களில் நடித்த நடிகர் நிதீஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழப்பு

0 16207
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

வெண்ணிலா கபடிக்குழு மூலம் பிரபலமான துணை நடிகர் நிதீஷ் வீரா, புதுப்பேட்டை, தனுஷின் அசுரன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

இறுதியாக, விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிதீஷ் வீரா சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments