இஸ்ரேலும் பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்-ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

0 1045
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும் இடையே வெடித்துள்ள பதற்றமான மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் .இருதரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஐநா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் கிழக்கு ஜெரூசேலமில் தொடங்கிய மோதல் தற்போது கட்டுப்பாட்டை மீறி யுத்தம் வெடிக்கும் சூழலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இருதரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர், அண்மைக்காலத்தில் மிகவும் பதற்றம் மிக்க சூழலை இந்த மோதல்கள் உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments