கங்கையில் தொடர்ந்து உடல்கள் வீசப்படுவதாகப் புகார்-போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

0 2171
கங்கை நதியில் மிதக்கும் சடலங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யுமாறு பீகார், உத்தரப்பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கங்கை நதியில் மிதக்கும் சடலங்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யுமாறு பீகார், உத்தரப்பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சடலங்களை ஆற்றில் வீசியெறிவதைத் தடுக்க கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதனையடுத்து கங்கை நதிக்கரைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றில் சடலங்கள் வீசப்படுவது கொரோனா தாக்கத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. உயிரிழந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஆற்றில் சடலங்கள் மிதப்பதால் தண்ணீரின் தரம் பயன்பாடு குறித்து நதிநீர் தூய்மைப்படுத்தும் குழுவினருடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments