வீட்டை விட்டு வெளியே போறீங்களா.. இத கொஞ்சம் கேளுங்க..! ஒரு பாசக்கார தம்பியின் கண்ணீர்

0 6426

மிழக அரசு ஊரடங்கு போட்டுவிட்டதால் கொரோனா குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில், முககவசமின்றி அக்கம்பக்கத்து வீட்டாரிடம் மெத்தனமாக அரட்டை அடிப்பவர்களால் அறிகுறி இன்றி லோ ஆக்ஸிஜன் கொரோனா தீவிரமாக பரவுவதாக மருத்துவர் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊரடங்கு போட்டாச்சி... இனி கொரோனா மெல்ல குறைந்து விடும் வழக்கம் போல நம்ம வேலையை பார்போம் என்று நம்மில் பெரும்பாலானோரின் மன நிலை இதுவாக இருக்கலாம் ஆனால் உண்மையில் கொரொனா அதிதீவிர நிலையில் பரவிவருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் மருத்துவர் பிரகாஷ், வீட்டுக்குள் இருந்தாலும் மாஸ்க் அணிவது அவசியும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அக்கம்பக்கத்து வீட்டாருடன் மாஸ்க் அணியாமல் பேசிபழகுவதானால் வயதான பலருக்கு அறி குறியில்லாமல் அதே நேரத்தில் ஆக்ஸிஜன் குறைபாடுள்ள கொரோனா தொற்று தீவிரமாக பரவதொடங்கியுள்ளதாகவும், இதனால் கடந்த 10 நாட்களில் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

கூடுமானவரை வாயையும் மூக்கையும் நன்றாக மூடியுள்ள முககவசத்தை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே கொரோனா பரவலின் சங்கிலியை உடைக்க முடியும் என்று சுட்டிக்காட்டும் பிரகாஷ் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதே போல திருப்பூர்ரை சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் தனது குடும்பத்தில் பலர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு விட்டதாகவும், ஓட்டுனரான தனது சகோதரருக்கு ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் தான் பட்ட அவஸ்தைகளையும் தற்போது வரை அவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது கூட தெரியாமல் பரிதவித்து வருவதாக கண்ணீருடன் குரல் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவரும் அனைவருக்கும் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதன் தயவு செய்து அனாவசியமாக வெளியில் சுற்றி குடும்பத்தாருக்கு கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடாதீர்கள் , உங்களிடம் லட்சக்கணக்கில் ரொக்கம் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் படுக்கை இல்லை அதனை உணர்ந்து அக்கறையுடன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த பாசக்கார சகோதரர்.

கொரோனாவை குணப்படுத்த ஒரு பக்கம் மருத்துவர்கள் போராடிவரும் நிலையில் அதன் பரவலை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்து, வீட்டிலும் முககவசம் அணிவதை கட்டாயமாக்குவோம், கொரோனா பரவலை தடுப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments