கொரோனா நோயாளிகளுக்கு DRDO தயாரித்த 2-DG மருந்து இன்று அறிமுகம்

0 4779
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ள கோவிட் நோயின் தாக்கத்தை குறைக்கும் புதிய மருந்தை இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ள கோவிட் நோயின் தாக்கத்தை குறைக்கும் புதிய மருந்தை இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதனும் பங்கேற்கிறார். முதல் கட்டமாக பத்தாயிரம் பாக்கெட்டுகள் 2 டிஜி என்ற இந்த மருந்து வெளியிடப்படுகிறது.

இன்று முதல் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து விநியோகிக்கப்படுகிறது. பவுடர் போன்ற இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய இந்த மருந்து உதவும். ஆக்சிஜன் தேவையையும் இந்த மருந்து குறைக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments