கர்நாடகாவில் கொரோனா தொற்றினால் ஒரே வாரத்தில் 3,500 பேர் உயிரிழப்பு

0 3937
கொரோனா தொற்றினால் கர்நாடகாவில் இறந்தவர்களின் விகிதம் 107 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றினால் கர்நாடகாவில் இறந்தவர்களின் விகிதம் 107 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புள்ளி விபரங்களின்படி, கொரோனா பரவிய நாட்களில் அம்மாநிலத்தில் கடந்த வாரம் மிக மோசமானதாகக் கூறப்படுகிறது. அங்கு கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலான நாட்களில் பெருந்தொற்றால் 3 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை முந்தைய வாரங்களை விட இரு மடங்கு அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா முதல் அலையில் கர்நாடகாவில் 3 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் கடந்த ஆண்டு எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

அம்மாநிலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 பேர் உயிரிழப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments