ரெம்டிசிவிர் தட்டுப்பாடுக்குத் தீர்வு... தினசரி ஒதுக்கீடு 20 ஆயிரமாக உயர்வு..!

0 1639
ரெம்டிசிவிர் தட்டுப்பாடுக்குத் தீர்வு... தினசரி ஒதுக்கீடு 20 ஆயிரமாக உயர்வு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கான தினசரி ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டை 7 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல், ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டிசிவிர் மருந்து கிடைக்காமல் நிலவிய பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டுக்கான ரெம்டிசிவிர் தினசரி ஒதுக்கீட்டை 7 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதி உள்ள கடிதத்தில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, ரெம்டிசிவிர் மருந்து தினசரி ஒதுக்கீட்டை உயர்த்தியதற்கு நன்றி
என முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, சென்னை - தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இனி அந்தந்த மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டிசிவர் மருந்து வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரைப்படி,.விற்பனை மையங்களுக்கு தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள்,நேரில் சென்று, தேவையான ரெம்டிசிவர் மருந்துகளை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது. தேவை இல்லாத அலைச்சல் - ஒரே இடத்தில் அதிக
எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் கூட்டம் சேருவது - பல மணி நேரம் காத்திருப்பது தவிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசின் புதிய நடவடிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments