சென்னையில் ரெம்டிசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 27 பேர் கைது

0 2086
சென்னையில் ரெம்டிசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 27 பேர் கைது

ரெம்டிசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை சென்னை காவல் துறை மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்து 245 ரெம்டிசிவிர் மற்றும் அதற்கு மாற்று மருந்தாக கருதப்படும் நினவீர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments