கிராமங்கள், பழங்குடி பிரதேசங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

0 2307
கிராமங்கள், பழங்குடி பிரதேசங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கரங்களை ஒட்டியுள்ள பகுதிகள், கிராமங்கள் மற்றும் பழங்குடி பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கெல்லாம் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்துமாறு மாநிலங்களை சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த பகுதிகளில் கொரோனா கண்காணிப்பு, பரிசோதனைகள், வீட்டுத்தனிமை வசதிகள் உள்ளிட்டவற்றை அதிகரிக்க வேண்டும் என மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கிராமிய ஆரம்ப நிலை சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கிராமங்களில் உள்ள ஆஷா பணியாளர்கள் மூலம் இன்புளூவன்சா அல்லது சுவாச நோய் உள்ளவர்களை கண்டறிந்து உரிய மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments