சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

0 1007
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் கொரோனா தடுப்பூசி முகாம்களைத் தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வி.ஆர். பிள்ளை தெரு, கேனல் சாலை, முத்தையா தெரு ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை உதயநிதி தொடங்கி
வைத்தார்.

பின்னர் வீடு வீடாக நடந்து சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா? எனப் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

ராயப்பேட்டையில் கொரோனா தொற்றால், வீட்டுத் தனிமையில் இருப்பவர்களைச் சந்தித்து, உடல் நலம் விசாரித்த உதயநிதி, மாநகராட்சி ஊழியர்கள், தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பார்கள் என உறுதி அளித்தார்.

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த உதயநிதி, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு எட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments