மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போடுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு உத்தரவு

0 1645
மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போடுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமையில் தடுப்பூசி போடுவதற்குத் தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி மையங்களில் பொதுவரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனிவரிசை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளப்பாதை அமைக்கவும், தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைத்துச் செயல்படவும் அறிவித்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments