மனநலம் பாதித்த மகனுக்கு மருந்து வாங்கச் சென்றவருக்கு அபராதம்..! முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தையும், மருந்தையும் வழங்கிய காவல்துறையினர்

0 7623
மனநலம் பாதித்த மகனுக்கு மருந்து வாங்கச் சென்றவருக்கு அபராதம்..! முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தையும், மருந்தையும் வழங்கிய காவல்துறையினர்

திருவள்ளூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்கச் சென்றபோது காவல்துறையினர் அபராதம் விதித்தது குறித்து முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்ததால் வீடு தேடிச் சென்று பணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.

செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்குச் சென்றார்.

காக்களூரில் அவரை மறித்த காவல்துறையினர் ஊரடங்கை மீறியதாகக் கூறி 500 ரூபாய் அபராதம் விதித்தனர். மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாகச் செலுத்திவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பியது குறித்து அவர் முதலமைச்சருக்கு டுவிட்டரில் தெரிவித்தார்.

இதையடுத்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் காவல் ஆய்வாளர், பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்ததுடன், அவர் மகனுக்குத் தேவையான மருந்துகளையும் இலவசமாக வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments