டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

0 1495
டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு

டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறையத் துவங்கினாலும் அது 5 சதவிகிதத்தை விட இன்னும் குறையவில்லை என்பதால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், கடந்த சில தினங்களாக கொரோனா கட்டுப்பாட்டில் கிடைத்த வெற்றியை உறுதி செய்யும் வகையில் அடுத்த திங்கள் கிழமை வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தெரிவித்தார்.

டெல்லியில் ஏப்ரல் மாதம் 35 சதவிகிதமாக இருந்த வைரஸ் தொற்று, தற்போது 11.32 சதவிகிதமாக குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments