கொரோனா விவகாரத்தில் மோடியை விமர்சித்து போஸ்டர்கள் : 17 பேர் கைது

0 1412
கொரோனா விவகாரத்தில் மோடியை விமர்சித்து போஸ்டர்கள் : 17 பேர் கைது

கொரோனாவை கையாளுவதில் பிரதமர் மோடியின் திறனை விமர்சித்து டெல்லியில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நமது பிள்ளைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு அனுப்பியது ஏன் என மோடியை கேள்வி கேட்டு இந்த போஸ்டர்கள் டெல்லியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக டெல்லி போலீசார் 21 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.

கல்யாண்புரி பகுதியில் இது போன்ற போஸ்டர்களை ஒட்டிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 போஸ்டர்களை பறிமுதல் செய்தனர். மேலும் பலர் இது தொடர்பாக கைது செய்யப்படுவார்கள் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments