மேற்குவங்கம் துர்க்காபூரிலிருந்து 40 டன் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்தது இரண்டாவது ஆக்சிஜன் ரயில்

0 1687
மேற்குவங்கம் துர்க்காபூரிலிருந்து 40 டன் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்தது இரண்டாவது ஆக்சிஜன் ரயில்

மேற்கு வங்க மாநிலம் துர்க்காபூரில் இருந்து 40 டன் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு வந்த ரயில் சென்னை திருவொற்றியூருக்கு வந்தடைந்தது.

வெள்ளியன்று 40 டன் ஆக்சிஜன் டேங்குகளை ஏற்றிக்கொண்டு முதல் ஆக்சிஜன் ரயில் சென்னைக்கு வந்தது. இந்நிலையில் துர்க்காபூரில் இருந்து புறப்பட்ட இரண்டாவது ஆக்சிஜன் ரயில் 40 மணி நேரப் பயணத்துக்குப் பின் இன்று திருவொற்றியூர் சரக்குப் பெட்டக முனையத்துக்கு வந்தது.

இந்த ஆக்சிஜன் டேங்குகள் மணலியில் உள்ள கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதுபோல் அடுத்த 3 மாதங்களுக்கு ரயிலில் ஆக்சிஜன் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments