தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு

0 1541
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் - தமிழக அரசு

ரெம்டெசிவிர் மருந்துகளை மருத்துவமனைகளிலேயே கிடைக்கச்செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒருநாளில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில், தமிழகத்துக்குக் கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவது குறித்து ஆலோசித்ததுடன், மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவிர் மருந்துகளைக் கிடைக்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், கூடுதல் படுக்கைகளை உருவாக்குவது பற்றியும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments