முட்டைகளை நைசாக திருடி வசமாக சிக்கிய போலீஸ்காரர்-காவல் காக்க வேண்டியவரே களவாணியாக மாறிய காட்சி

0 6110
சண்டிகரில் பட்டப்பகலில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் திருடிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சண்டிகரில் பட்டப்பகலில் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளைத் திருடிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதேகார் சாஹிப் என்ற இடத்தில் தலைமைக் காவலர் பிரித்பால் சிங் என்பவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்தில் தள்ளு வண்டியில் ஏராளமான முட்டைகள் இருப்பதைக் கண்ட பிரித்பால் சிங் மெதுவாகச் சென்று அங்கிருந்த முட்டைகளை ஒவ்வொன்றாகத் திருடி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார்.

காவல் காக்க வேண்டியவரே களவாணியாக மாறிய காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து பிரித்பால் சிங்கை பணியிடை நீக்கம் செய்து பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments