இந்தியாவில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியே சிறந்த வழி-டாக்டர் தேவி ஷெட்டி

0 1782
இந்தியாவில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியே சிறந்த வழி என்று டாக்டர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியே சிறந்த வழி என்று டாக்டர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை எழுவதற்கு முன்பாக 51 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் அது இரண்டு அல்லது மூன்றுமாதங்களில் சாத்தியம் தான் என்றும் தெரிவித்துள்ளார். நாராயணா மருத்துவமனையின் தலைமை மருத்துவரான டாக்டர் தேவி ஷெட்டி ஆக்சிஜன் விநியோகத்தைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவைச் சேர்ந்தவராவார்.ஒரு நாள் லாக்டவுன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பு பத்தாயிரம் கோடி ரூபாய் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

51 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போட 70 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள டாக்டர் தேவி ஷெட்டி நம் நாட்டு பொருளாதாரத்திற்கு இது பெரிய தொகை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments