உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம்-பிரதமர் மோடி

0 2909
கொரோனாவுக்கு எதிரான போரில் உள்ளூர் அளவிலான ஊரடங்குகள் தான் இப்போதைய முக்கியத் தேவை என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் உள்ளூர் அளவிலான ஊரடங்குகள் தான் இப்போதைய முக்கியத் தேவை என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிரதமர், பாதிப்பு அதிகமுடைய மாநிலங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கை அமல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். அங்கன்வாடி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மோடி ,ஆக்சிஜன் கையிருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். உபரியாக பயன்படாமல் சில மாநிலங்களில் இருக்கும் ஆக்சிஜனை தேவை இருக்கும் பகுதிகளுக்கு விநியோகிக்குமாறும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments