டவ் தே புயல் காரணமாக 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

0 2400
டவ் தே புயல் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் சேவையை மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

டவ் தே புயல் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் சேவையை மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில ரயில்கள் பகுதியளவு இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள நிர்வாகம் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

டவ் தே புயல் காரணமாக இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் லட்சத் தீவில் உள்ள அகத்தி என்ற இடத்தில் விமான நிலைய கட்டுமானப் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் நிறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments