வரும் 28ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்.. கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்களுக்கு வரியைக் குறைக்கத் திட்டம்..!

0 1422
ஜிஎஸ்டி கவுன்சிலின் 43 வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 43 வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், நிதித்துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டியின் கூட்டம் நடைபெற்றது. மாநில அரசுகள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து 21 மாநிலங்கள் வருவாய்ப் பற்றாக்குறையை போக்க மத்திய அரசின் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. மத்திய அரசு எந்த மாநில அரசுக்கும் ஈட்டுத் தொகை வழங்குவதை மறுக்கவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த முறை நடைபெறும் கூட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மீது ஜிஎஸ்டி வரியை நீக்க கோரிக்கை எழுந்துள்ளதால் அது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments