ரெம்டெசிவிர் மருந்து எதற்கு? மருத்துவர் விளக்கம்

0 10764
ரெம்டெசிவிர் மருந்து எதற்கு? மருத்துவர் விளக்கம்

ரெம்டெசிவிர் எனும் மருந்தை வாங்க இரவு பகலாக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் காத்துக்கிடங்கின்றனர். சென்னை போன்ற இடங்களில் அந்த மருந்தை வாங்க பெரும் தள்ளுமுள்ளே நடக்கிறது. இந்த ரெம்டெசிவிர் மருந்து என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கூட்டம் இரவுப்பகலாக காத்திருக்கிறது. மருந்து விற்பனை தொடங்கியதும் முண்டியடித்துக் கொண்டு ஓடும் நிலையும் உள்ளது. ஏனென்றால் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிவிட்டால் கொரோனா நோயாளிகள் குணமாகிவிடுவார்கள் என்று மக்கள் நம்புவதோடு மருத்துவர்களும் கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்தை தான் பரிந்துரைக்கின்றனர்.

இந்நிலையில் ரெம்டெசிவிர் என்பது வைரசை அழிக்கக்கூடிய ஒரு மருந்துதான், ஆனால் இதனை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் சில நுட்பம் இருப்பதாக கூறுகிறார் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார். அதன்படி, யாருக்கெல்லாம் சிகிச்சையின் போது ஆக்சிஜன் தேவை இல்லையோ அவர்களுக்கு ரெம்டெசிவிர் தேவை படாது.

அதேபோல் யாருக்கெல்லாம் ஆக்ஸிஜன் அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கும் இந்த மருந்து பயன்படாது. ஆனால். கொரோனா நோயாளிகளில் உடலில் ஆக்சிஜன் அளவு ஆரம்ப நிலையில் குறையத் தொடங்கும் போது மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவை என்கிறார் டாக்டர் ஆனந்த்குமார்.

கொரோனாவை குணப்படுத்த நேரடியாக மருந்துகள் இல்லை என்பதனால் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிரை மருந்தாக பயன்படுத்தி பார்ப்பதாக கூறிய டாக்டர் ஆனந்த்குமார், மிக முக்கியமான மருந்து பொருட்களின் பட்டியலில் இந்த மருந்து கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து ரெம்டெசிவிரை எடுத்துக்கொண்ட பின் சி.டி ஸ்கேன் செய்து பார்த்தாலும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை என்றும் எனவும் டாக்டர் ஆனந்த்குமார் விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments