ஆய்வு பணிக்கு சென்ற அமைச்சரின் காலில் விழுந்து உதவி கேட்ட பெண்; உடனடியாக உதவ உத்தரவிட்ட அமைச்சர்..!

0 6960
ஆய்வு பணிக்கு சென்ற அமைச்சரின் காலில் விழுந்து உதவி கேட்ட பெண்; உடனடியாக உதவ உத்தரவிட்ட அமைச்சர்..!

சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிக்காக சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின், காலில் விழுந்து தனது தாய்க்கு படுக்கை வசதி செய்து தருமாறு பெண் ஒருவர் மன்றாடியது காண்போரை கலங்க வைத்தது.

அங்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது சேலம் மணக்காட்டை சேர்ந்த அமுதா என்ற பெண், 3 நாட்களாக படுக்கை வசதி கிடைக்காமல் தனது தாயை ஆம்புலன்ஸிலேயே படுக்கை வைத்திருப்பதாக கூறி அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து கதறி அழுதார்.

இதனைக் கேட்ட அமைச்சர், மருத்துவமனை டீனை அழைத்து, உடனடியாக அந்த பெண்ணின் தாய்க்கு உரிய பரிசோதனை செய்து படுக்கை வசதி செய்து தர உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments