அச்சம் தரும் புதிய உச்சம்..!

0 6313

மிழகத்தில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேபோல, உயிரிழப்பும் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 20,905 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 வயது சென்னை இளம்பெண், 23 வயது கிருஷ்ணகிரி இளம்பெண், 92 வயது திருவள்ளூர் முதியவர், 97 வயது சென்னை முதியவர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 300 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் புதிதாக 6,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3124 பேரும் செங்கல்பட்டில் 2013 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் - 1551,,காஞ்சிபுரத்தில் 1521 . திருச்சி - 1263, கன்னியாகுமரி - 1237, மதுரை - 1231 , திருப்பூர் - 1008, தூத்துக்குடி - 896 , ஈரோடு - 827 மற்றும் கடலூர் 719 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் -சிறுமிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 196 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மாநிலம் முழுவதும் 2,07,789 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments