கொரோனாவை கட்டுப்படுத்த மேற்குவங்கத்தில் மே.31 வரை முழு ஊரடங்கு..!

0 1706

மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி மளிகைப் பொருட்கள், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு காலை 7 மணி முதல் 10 மணிவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்சாலைகள் இயங்கவும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments