தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0 1534
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

புயல் எதிரொலியாக, தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலாளர், வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

நிவாரண முகாம்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொண்டதோடு, அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிளில் பேரிடர் மீட்பு குழுக்களை கொண்டு நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments