ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்...கிடைத்ததோ ரெட்மி நோட் 10 - இன்ப அதிர்ச்சியில் மும்பைவாசி

0 27242
ஆர்டர் செய்ததோ மவுத்வாஷ்...கிடைத்ததோ ரெட்மி நோட் 10 - இன்ப அதிர்ச்சியில் மும்பைவாசி

மேசானில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரெட்மி செல்போன் டெலிவரி ஆன சுவாரஸ்ய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

லோகேஷ் தகா (lokesh daga) என்ற அந்த இளைஞர் கடந்த 10-ம் தேதி அமேசானில் 396 ரூபாய்க்கு கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், டெலிவரியின் போது அந்த பார்சலில் 13ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Redmi note 10 செல்போன் இருந்துள்ளது. தவறுதலாக வந்த ஆர்டரை ரிட்டர்ன் செய்யலாம் என்று பார்த்தால், மவுத்வாஷ் நுகர்வுக்குரிய தயாரிப்பு என்பதால் ரிட்டர்ன் செய்யும் ஆப்ஷன் காட்டவில்லை என ட்விட்டர் மூலம் அந்த இளைஞர் அமேசானுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் தனது பெயரில் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது தெலுங்கானாவைச் சேர்ந்த வேறொரு வாடிக்கையாளருக்கானது எனவும் அந்த இளைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments