அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை

0 1176
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் கொரோனா தடுப்பு மருந்து வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை

மெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்து 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஜூலை முதல் ஆகஸ்டு வரையிலான 3 மாதக் காலத்தில் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்து 5 கோடி டோஸ் தடுப்பு மருந்தை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவதில் இருந்து பாதுகாப்பு வழங்கும்படி பைசர் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

இதனால் உடன்பாடு எட்டுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதற்குத் தீர்வு கண்டதும் விரைவில் உடன்பாடு எட்டப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments