ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார்

0 1130
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதித்து வரும் போலீசார் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். 

சென்னை அண்ணா சாலை சந்திப்பு, தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய ஆவணங்கள் இன்றி  தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு அபரதம் விதிக்கும் போலீசார் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் புஷ்பா ஜங்சன் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார் தேவையின்றி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குபதிவு செய்து வருகின்றனர்.

ஈரோடு : ஈரோட்டில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் : முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் தஞ்சாவூரில் வாகன போக்குவரத்து வழக்கம் போல் உள்ளது. 

8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தவில்லை.  இதனால் பொதுமக்கள் வழக்கம் போல் எந்தவித அச்சமுமின்றி வெளியில் சுற்றித்திரிகின்றனர். 

நெல்லை : முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வண்ணாரபேட்டையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்களை எச்சரித்து அனுப்பியதோடு சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments