இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 3,890 பேர் உயிரிழப்பு

0 3140
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3லட்சத்து26ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3லட்சத்து26ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் 4 லட்சத்தை தாண்டி பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 3890 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 லட்சத்து 53 ஆயிரத்து 299 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, 4-வது நாளாக தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் 36லட்சத்து73ஆயிரத்து802 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை, 18 கோடியே 04 லட்சத்து 57 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments