டெல்லியில் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்

0 23041
டெல்லியில் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்

டெல்லியில் கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட நபருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இது தொடர்பாக டெல்லியின் உயர்மட்ட பிரிவினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது டுவிட்டர் பதிவில், நெருங்கிய தோழியின் தந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் என்றும் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க உதவி செய்யும்படி தம் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், தோழியின் இளைய சகோதரி கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அந்த நபர் தம்முடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தால், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.

இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?' என வருத்தத்துடன் அந்தப் பெண் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த நபரின் இந்த அத்துமீறிய செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments