இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடுமையான மோதல் : சமாதான முயற்சிகளை மேற்கொள்ள சிறப்புத் தூதரை அனுப்பியது அமெரிக்கா

0 2378
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடுமையான மோதல் : சமாதான முயற்சிகளை மேற்கொள்ள சிறப்புத் தூதரை அனுப்பியது அமெரிக்கா

ஸ்ரேல் ராணுவத்தினரும் பாலஸ்தீன படையினரும் கடந்த 5 நாட்களாக மாறிமாறி கடுமையான ராக்கெட் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா தனது சிறப்புத் தூதரை சமாதான நடவடிக்கை மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஊடகச் செயலாளர் ஜென் சாகி, ஹமாஸ் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அது இஸ்ரேல் மீது 1500 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்துவதை கண்டிப்பதாகவும் கூறினார்.

தற்காப்புக்காக இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஹேடி அமீர் இஸ்ரேல் சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments