ஊரடங்கால் எளிமையாக நடைபெற்ற பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா..

0 5154

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஊரடங்கு உத்தரவால் நள்ளிரவில்  50 பேருடன் எளிமையாக நடைபெற்றது. 

அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறும் இந்த சிரசு திருவிழாவில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சகணக்கானோர் பங்கேற்பர்.

ஆனால் தற்போது கொரோனா 2வது அலை காரணமாக அனைத்து மத விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆகம விதிப்படி இந்த திருவிழாவை நடத்திக் கொள்ள ஆட்சியர் அனுமதி வழங்கினார். இதனை அடுத்து ஒரு குடையுடனும் 50 நபர்களுடனும் இந்த சிரசு திருவிழா எளிமையாக நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments