சிபிஎஸ்இ , சி.ஐ.எஸ்.சி.இ. , 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

0 1089
சிபிஎஸ்இ , சி.ஐ.எஸ்.சி.இ. , 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

CBSE , ICSE , மற்றும் பிளஸ் டூ வகுப்புத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே போல் சிஐ.எஸ்.சி.இ வெளியிட்ட சுற்றறிக்கையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுகளையும் பிளஸ்டூ தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments