முத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்..! ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி

0 7817
முத்தம் கேட்ட ரோமியோவை.. ரூம் போட்டு மொத்திய சகோஸ்..! ரவுடி கேங்கிடம் சிக்கிய பேபி

ராங்கால் செய்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு முத்தம் கேட்டு அடம் பிடித்த இளைஞரை, லாட்ஜில் ரூம் போட்டு பெண்ணின் சகோதரர் தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பல் அடித்துத் துவைத்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது

பஞ்சு மெத்தையில் போட்டு காலால் மொத்தி எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பவர் சித்தூர் மதனப்பள்ளியை சேர்ந்த ராங்கல் மன்மதன் மகேஷ்..!

சில தினங்களுக்கு முன்பு மகேஷ்க்கு ராங்காலில் பேசிய பெண் ஒருவர், தெரியாமல் அழைத்து விட்டதாகக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்பதை வாடிக்கையாக்கிய மகேஷ், அந்த பெண்ணின் குரல் அழகாக இருப்பதாக கூறி காதலை வெளிப்படுத்தியதோடு நேரில் சந்திக்க வேண்டும் என்று மன்மதன் போல காதல் வலை வீசியுள்ளான். அவன் வீசிய வலையில் அந்த பெண்ணுக்கு பதில் மகேஷே சிக்கிக் கொண்டது தான் எதிர்பாராத டுவிஸ்ட்டாகி விட்டது.

அந்த பெண்ணிடம் "ஒரே ஒரு முத்தமாவது கொடு விட்டு விடுகிறேன்" என்று நிபந்தனை விதித்த மகேஷை, முத்தம் தருவதாகக் கூறி பக்கத்தில் உள்ள லாட்ஜிக்கு அழைத்துள்ளார் அந்த பெண், ஆசையுடன் வந்த மகேஷுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை இப்படி மொத்தமாக வைத்து மொத்துவார்கள் என்று..!

அந்த பெண் வரச்சொன்ன குறிப்பிட்ட லாட்ஜில் அந்த பெண்ணின் அண்ணன், உள்ளூர் ரவுடிகள் 5 பேருடன் காத்திருக்க, மஜாவாக சென்று சிக்கிய மகேஷை ஆளுக்கு ஒரு பக்கமாக வைத்து அடித்து துவைத்து ஓடவிட்டனர்

ப்ரீயா கிடைத்தவன் என்பதால் பாக்ஸிங் எல்லாம் குத்தி பழகியதோடு, முத்தம் கேட்ட மகேஷ் முகத்தை பஞ்சராக்கி அனுப்பி வைத்தது அந்த ரவுடி கேங்..!

அடிவாங்கியது வெளியில் தெரியாமல் மகேஷ் மவுனம் காத்த நிலையில் அவனை அடித்து நொறுக்கிய போது எடுத்த வீடியோவை வெளியிட்டு அந்த ரவுடி கும்பல் வசமாக போலீசிடம் சிக்கியுள்ளது. அடி கொடுத்த கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஓசியில் முத்தம் கிடைக்கும் என்ற ஆசையில் சென்ற இளைஞனை மொத்தமாக ரூம் போட்டு மொத்தி எடுத்த சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments