தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..!

0 2890
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா..!

மிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 31 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 20,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21 வயது செங்கல்பட்டு இளம்பெண், 96 வயது சென்னை முதியவர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 288 பேர் பலியானார்கள்.

சென்னையில் புதிதாக 6,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவையில் 3197 பேரும் செங்கல்பட்டில் 2225 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் - 1410, மதுரை - 1250 , திருச்சி - 1224, கன்னியாகுமரி - 1025, காஞ்சிபுரத்தில் 889 , தூத்துக்குடி - 885 , திருநெல்வேலி - 831, ஈரோடு - 781 மற்றும் திருப்பூரில் 771 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் -சிறுமிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 183 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மாநிலம் முழுவதும் 1,95,339 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments