ரம்ஜான் பண்டிகையையொட்டி சூடு பிடித்த ஆன் லைன் பிரியாணி விற்பனை..! கடை வாசலில் வரிசை கட்டிய உணவு டெலிவரி ஊழியர்கள்

0 12414
ரம்ஜான் பண்டிகையையொட்டி சூடு பிடித்த ஆன் லைன் பிரியாணி விற்பனை..! கடை வாசலில் வரிசை கட்டிய உணவு டெலிவரி ஊழியர்கள்

சென்னையில் முழு ஊரடங்குக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஆன்லைனில் பிரியாணி விற்பனை சூடு பிடித்தது.

சைதாப்பேட்டையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் இஸ்லாமியர்கள் ஆன்லைன் மூலம் பெருமளவில் பிரியாணி ஆர்டர் கொடுத்திருந்தனர்.

இந்த பிரியாணியை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்காக உணவு நிறுவனங்களின் ஊழியர்கள், அதிக அளவில் குவிந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,டெலிவரி நிறுவன ஊழியர்களை வரிசையில் நிற்க வைத்து, பிரியாணி வாங்கிச செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலை பகுதியில் உள்ள பெரும்பாலான பிரியாணி கடைகளிலும் ரம்ஜான் பிரியாணி விற்பனை சூடு பிடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments