இன்றைய நாள் அமெரிக்காவுக்கு சிறப்பான நாள்..! முகக்கவசத்தை அகற்றுங்கள், புன்னகையுடன் மற்றவர்களை வாழ்த்துங்கள் -அதிபர் ஜோ பைடன்

0 8951
இன்றைய நாள் அமெரிக்காவுக்கு சிறப்பான நாள்..! முகக்கவசத்தை அகற்றுங்கள், புன்னகையுடன் மற்றவர்களை வாழ்த்துங்கள் -அதிபர் ஜோ பைடன்

முகக்கவசத்தை அகற்றியபடி, வெள்ளைமாளிகைக்கு வருகை தந்த அதிபர் ஜோ பைடன், இன்றைய நாள் அமெரிக்காவுக்கு சிறப்பான நாள் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்தது.

இந்நிலையில் முகக்கவசமின்றி வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ஜோ பைடன், நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாம் வெற்றிப்பெற்றுவிட்டோம் என அவர் கூறினார்.

இனி முகக்கவசத்தை அகற்றுங்கள், புன்னகையுடன் மற்றவர்களை வாழ்த்துங்கள் என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments