தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை அல்லது நாளை மறு நாளில் தொடங்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2324
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை அல்லது நாளை மறு நாளில் தொடங்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதாக கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை அல்லது நாளை மறுநாளில் தொடங்குமென தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், ரெம்டெசிவிரை உயிர்காக்கும் மருந்து போன்று சிலர் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும், மருத்துவர்கள் மனசாட்சி படி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

வெளி மாநிலங்களில் இருந்து வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது தமிழகத்துக்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments