போதுமான அளவு தடுப்பூசி இல்லாமல் எப்படி தடுப்பூசி போடுவது? கொரோனா காலர்டியூனை சுட்டிக்காட்டி டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

0 1576
போதுமான அளவு தடுப்பூசி இல்லாமல் எப்படி தடுப்பூசி போடுவது? கொரோனா காலர்டியூனை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

போதுமான அளவு தடுப்பூசி இல்லாத போது எப்படி அனைவரும் தடுப்பூசி போடுவார்கள் என கொரோனா காலர்டியூனை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், எப்போது அழைப்பு மேற்கொண்டாலும், எரிச்சலூட்டும் வகையில் தடுப்பூசி போடடுக் கொள்ளுமாறு காலர் டியூன் ஒலிப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு தான் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியதோடு, தடுப்பூசியே இல்லாத போது மக்கள் எப்படி காலர் ட்யூனை கேட்டு தடுப்பூசி போடுவார்கள் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments