மருந்துகளைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

0 1758
மருந்துகளைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

பேராசை காரணமாக மருந்துகளைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கைகள் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள காணொலியில், இத்தகைய சோதனைக் காலங்களில் பணத்தாசை கொண்டு சிலர் மருந்துகளைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments