தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய கட்டணங்கள் நிர்ணயம்..!

0 2204

னியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய கட்டணம் நிர்ணயம செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு முதல் 10 கிலோ மீட்டர் வரை ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் என்றும், 10 கிலோ மீட்டருக்கு பிறகு 1 கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

உயிர்காக்கும் கருவி உள்ளிட்ட வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டர் வரை 2 ஆயிரம் ரூபாய் என கட்டண ம் நிர்ணயித்துள்ள தமிழக அரசு, 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு 50 ரூபாய் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கிலோ மீட்டர் வரை கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் என்றும் 10 கிலோ மீட்டருக்கு பிறகு கிலோ மீட்டருக்கு 100 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது . இந்த உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments