அரபிக்கடலில் புயல்... தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

0 6765
அரபிக்கடலில் புயல்... தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

அரபிக்கடலில் புயல் உருவாவதின் எதிரொலியாக, நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென் கிழக்கு அரப்பிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அது, அடுத்த 36 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று புயலாக உருமாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு டவ்-தே (TAUKTEA) என பெயரிட வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 18 ஆம் தேதி குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரைக்கு இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் வேக மாறுபாடு காரணமாக அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. 

புயல் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழையும், 15 ஆம் தேதி ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15-ந் தேதி நாளை அதி கனமழை பொழியும் என்பதை குறிக்கும் ரெட் அலர்ட்டும் எச்சரிக்கையும், 17,18 ஆகிய தேதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments